வாஷிங்டன்: கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இன்று (டிசம்பர் 3) பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து சான் பிரான்சிஸ்கோவில் வழங்கினார். இந்த விருதை பெற்றபின் சுந்தர் பிச்சை கூறுகையில், "இந்த மகத்தான கவுரவத்திற்காக இந்திய அரசுக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கற்றலையும் அறிவையும் நேசித்த குடும்பத்தில் வளர்ந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
இந்தியா என்னில் ஒரு பகுதி, எங்கு சென்றாலும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன் - சுந்தர் பிச்சை - Sundar Pichai received Padma Bhushan award
அமெரிக்காவில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
என் ஆர்வங்களை ஆராய்வதற்கான முயற்சியில் எனது பெற்றோர் நிறைய தியாகம் செய்துள்ளனர். இந்தியா என்னில் ஒரு பகுதி, எங்கு சென்றாலும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன். கூகுள் மொழிபெயர்ப்புச் சேவையில் 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், 8 மொழிகள் இந்திய மொழிகளாகும். மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தகவல் மற்றும் அறிவை பெற புதிய வழிகள் திறக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். இந்த வழிகளை தொழில்நுட்பத்தால் ஏற்படுத்த முடியும். இதனாலேயே தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:போதையால் மாறிய பாதை.. கோடீஸ்வரன் டூ பிச்சைக்காரன்