பியூனஸ் அயர்ஸ்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதல்முறையாக தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அரசுமுறை பயணமாக, பிரேசில், பராகுவே, அர்ஜென்டினா ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றார். பிரேசில், பராகுவே நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்த அவர், இறுதியாக அர்ஜென்டினா சென்றார். நேற்று (ஆக.26) அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ ஃபெர்னான்டஸ், நிதியமைச்சர் செர்ஜியோ மாசா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அதில், வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சவார்த்தை நடத்தப்பட்டது.
இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க அர்ஜென்டினா ஆர்வம் - மேட் இன் இந்தியா
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை தங்களது விமானப்படையில் சேர்க்க அர்ஜென்டினா ஆர்வம் தெரிவித்ததாகவும், அதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் குறிப்பாக பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவும் அர்ஜென்டினாவும் தங்கள் தற்போதைய ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன. இருநாட்டின் உறவை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதற்கு உறுதி அளித்துக் கொண்டன. மேட் இன் இந்தியா தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை தங்களது விமானப்படையில் சேர்க்க அதிபர் ஃபெர்னான்டஸ் ஆர்வம் தெரிவித்ததாகவும், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்புதல் தெரிவித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய வம்சாவளி பெண்கள் மீது நிறவெறி தாக்குதல்... அமெரிக்க பெண்மணி கைது
TAGGED:
argentina wants tejas