கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் அன்றாட தேவைக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று (மே9), மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் இலங்கையில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. அனைத்து போலீசாரும் உடனே பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எம்.பி., சுட்டுக்கொலை: இதற்கிடையில், நிட்டம்புவ பிரதேசத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அதுகோரல்லா (Amarakeerthi Athukorala) துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின.
இலங்கையில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் அங்கு ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்சார இணைப்பு இல்லை. தகவல் தொழில்நுட்ப சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு: நாடு முழுக்க 144 தடை உத்தரவும், போராட்டம் நடைபெறும் இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ச வீடு மற்றும் அவரது உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம் கண்டதும் சுட உத்தரவு: தொடர்ந்து அந்நாட்டில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. நாடு முழுக்க வன்முறை சம்பவங்கள் அறங்கேறிவருகின்றன. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டதும் சுட முப்படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நாடு முழுக்க ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக ஆளுங்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
புத்த பிக்குகள் போராட்டம் அரசியல் பயங்கரவாதம்: தொடர்ந்து அவர், “அரசுக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.
இந்த அரசியல் பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது. இதற்கிடையில் தடை செய்ய குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களை தமிழர்களை ஒடுக்க இலங்கை அரசு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது என்பதும் நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கையில் உச்சகட்ட குழப்பம்; ஆளுங்கட்சி எம்பி கொலை.. ரயில் போக்குவரத்துக்கு தடை!