மெல்போர்ன்: இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் (World Cup 2023) பங்கேற்க உள்ள, 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18 பேர் கொண்ட அணியைத் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பு அறிவித்திருந்தது. அதில் இடம் பெற்ற நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் இதில் சேர்க்கப்படவில்லை.
இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் இடம் பெற்றுள்ளார். மேலும், அனுபவ வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான ஆடம் ஜம்பா மற்றும் ஆஷ்டன் அகார் சேர்க்கப்பட்டுள்ளனர். கிளேன் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தில் இருக்கும் நிலையில், உலகக் கோப்பைக்கு முன்னதாக குணமடைந்து விடுவார்கள் என்று கருதி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:World Cup India Squad : உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு!