அமெரிக்கா:பிரபல ஹாலிவுட் திரையுலக ஹீரோவான ஹக் ஜாக்மெனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முஷ்டியை மடக்கினால் அதிலிருந்து கத்தி வரும் இவரது படமான வால்வரின், இவரது படங்களில் பிரபலமான ஒன்றாகும்.
தற்போது இவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால், தியேட்டர் லைவ் பெர்ஃபாமென்ஸ் எனப்படும் மேடை நாடக நிகழ்சியான ”தி மியூசிக் மேன்” என்னும் நிகழ்சியில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ' இரண்டாவது முறையாக எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. 'தி மியூசிக் மேன்' நிகழ்சியில் எனக்குப் பதிலாக மிகவும் திறமையான மேக்ஸ் க்ளேடன் பங்கு கொள்ள உள்ளார். துரதிர்ஷ்டவசமாக என்னால் அவரது நடிப்பை நேரில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.