தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரதமராக பதவியேற்கவுள்ள மகிந்த ராஜபக்சவை சந்தித்து வாழ்த்திய இந்திய தூதர்!

கொழும்பு: இலங்கை பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள மகிந்த ராஜபக்சவை இலங்கைக்காக இந்திய தூதர் கோபால் பாக்லே நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள மகிந்தாவை சந்தித்து வாழ்த்திய இந்தியத் தூதர்!
இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள மகிந்தாவை சந்தித்து வாழ்த்திய இந்தியத் தூதர்!

By

Published : Aug 8, 2020, 10:47 PM IST

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஸ்ரீலங்கா ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தையும், ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இதனிடையே நாளை மறுநாள் கொழும்புவில் பிரதமராகப் பதவியேற்க இருக்கின்ற மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இன்று பிற்பகல் நேரில் சந்தித்து இந்தியாவின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததை இந்திய தூதர் நினைவுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

விரிவான இருதரப்பு நட்புறவையும் மேலும் வலுப்படுத்த இலங்கையின் புதிய அரசுடன் மிக நெருக்கமாகப் பணியாற்ற இந்திய அரசின் வலுவான விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தியதாக தூதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details