காங்கோ:மத்திய ஆப்பிரிக்க நாடானாகாங்கோவின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று (டிச.14)அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிரிக்கா சுகாதார அமைச்சர் லிசா நெம்பலெம்பா நாட்டின் தலைமை ஊடகத்திடம் தொலைபேசியில் பேசுகையில், "காங்கோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள் (டிச.12) அன்று விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக நகருக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கின. நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் இதுவரை மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை" எனவும் கூறினார்.