பெனு: நைஜீரியாவின் பெனு மாகணத்தில் உள்ள லோகோ கவுன்சில் என்னும் பகுதியில் பழங்குடியின கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து, நைஜீரிய பாதுகாப்புப் படை உயர் அலுவலர் பால் ஹெம்பா கூறுகையில், இந்த தாக்குதல் ஃபுலானி பழங்குடியினத்தை சேர்ந்த கும்பலால் நடத்தப்பட்டுள்ளது.
நைஜீரியா துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்
நைஜீரியாவின் பெனு மாகணத்தில் பழங்குடியின கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பெனு மாகணத்தில் பல்வேறு பழங்குடியின மக்களிடையே கால்நடைகள் மேய்ப்பது, தண்ணீர் பகிர்வது உள்ளிட்டவை காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுவருகிறது. அப்போது சிலர் கொலைவெறி தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையிலேயே இந்த தாக்குதலும் நடந்துள்ளது. இதற்கு முன்னதாக ஃபுலானி பழங்குடியின மக்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்தோம். இருப்பினும் தாக்குதல் நடந்துள்ளது. எங்களிடம் போதிய பாதுகாப்பு வீரர்கள் இல்லாததே தாக்குதல்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணம். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதங்கள் பறிமுதல், தேடுதல் வேட்டை உள்ளிட்டவையை தீவிரப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஹிஜாப் அணிய மறுத்த பெண் பத்திரிகையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்