ப்ராக் : செக் குடியரசு தலைநகர் ப்ரக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழகத்தில் இருந்த 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 25 பேர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர்.
சார்லஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். என்ன காரணத்திற்காக அந்த மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரிய வராத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
முதற்கட்டமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்த போலீசார், பின்னர் 14 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரின் பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.