லண்டன்:பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபத் கடந்த வியாழன்(செப்.8) இயற்கை எய்திய நிலையில், அவரது மகனும் பிரிட்டனின் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் ராஜாவாக இன்று(செப்.9) பதவியேற்றார். பாரம்பரிய முறைப்படி நடந்த முடிசூடும் விழாவில் துப்பாக்கிச் சத்தங்கள் முழங்க பிரிட்டனின் முன்னாள் இளவரசர் மூன்றாம் சார்லஸ், பிரிட்டனின் ராஜாவாகப் பதவியேற்றார். ,
பிரிட்டனின் முக்கிய நகரங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களிலும் பீரங்கிகள் முழங்கின. மேலும், இது குறித்து “நான் எனக்கு அளிக்கப்பட்ட பதவி மற்றும் பொறுப்புகளைப் பற்றி நான் நன்கு அறிவேன். எனது தாயை சிறந்த வழிகாட்டியாக வைத்து நான் அதைப் பின்பற்றுவேன்” என அங்கிருந்த மூத்த அரசியல், மத ஆலோசகர்களிடம் தெரிவித்துக்கொண்டார். மேலும், தனது தாய் இரண்டாம் எலிசபத் இறந்த நாளை பொது விடுமுறையாக தன் பதவியேற்பு விழாவில் அறிவித்தார்.