இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் வியாழக் கிழமை (செப்- 8) உடல்நலக் குறைவால் காலமானார். 2ஆம் எலிசபெத் அந்நாட்டில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர். இறுதி சடங்குகள் ஒருவார நடைபெறுவிருக்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து மகன் சார்லஸ் புதிய மன்னராக பதவியேற்றார். இவரது மறைவுக்கு பல உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எலிசபெத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி லோகோவை சாம்பல் நிறத்தில் மாற்றியுள்ளது.
இதுகுறித்து கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உறுதியான தலைமைத்துவமும், பொதுச் சேவையும் வாழ்நாள் முழுவதும் நிலையாக இருக்கும். அவர் போன்ற தலைவரை அனைவரும் நினைவு கூர்வோம்" என்று பதிவிட்டார். அதன்பின் லோகோ சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டது.