தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கூகுள் தேடலில் ஹிட் அடித்த ஃபிஃபா இறுதிப்போட்டி - ட்ராஃபிக்கால் ஸ்தம்பித்த கூகுள்! - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

ஃபிஃபா இறுதிப்போட்டியை கூகுளில் கோடிக்கணக்கான மக்கள் தேடியதால், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இணையத்தில் ட்ராஃபிக் ஏற்பட்டதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Google
Search

By

Published : Dec 19, 2022, 1:15 PM IST

டெல்லி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கத்தாரில் நேற்று(டிச.18) நடைபெற்றது. இதில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரான்சை தோற்கடித்து கோப்பையை வென்றது. ஆரம்பம் முதலே பரபரப்பாக இருந்த ஆட்டத்தை மைதானமே அதிரும் வகையில் ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதேபோல், உலகளவில் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரலையில் இப்போட்டியை கண்டுகளித்தனர்.

இந்த நிலையில், நேற்றைய ஃபிஃபா இறுதிப்போட்டியை கூகுளில் கோடிக்கணக்கான மக்கள் தேடியதாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி குறித்த தேடல், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு ட்ராஃபிக்கை இணையத்தில் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த உலகமும் ஒரு விஷயத்தைப் பற்றி தேடுவது போல இருந்ததாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: FIFA World cup: 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அர்ஜென்டினா வெற்றி; கொண்டாடும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details