தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கூகுளில் அறிமுகமான புது மாற்றம்... நீங்க பார்த்தீங்களா? - கூகுள் சி இ ஓ

பயனர்களின் வசதிக்காக கூகுள் தேடுபொறியில் உள்ள நாலேஜ் பேனல் எனப்படும் விவரக் குறிப்பை மறுவடிவமைப்பு செய்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள்
கூகுள்

By

Published : Dec 13, 2022, 5:41 PM IST

சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): கூகுள் நிறுவனம் தேடு பொறியில் உள்ள நாலேஜ் பேனல் எனப்படும் விவரக் குறிப்பை பயனரின் வசதிக்காக பெரியதாக மாற்றி மறுவடிவமைப்பு செய்துள்ளது.

ஒரு பிரபலத்தையோ அல்லது நிறுவனத்தையோ கூகுளில் தேடும்போது வலதுபுறத்தில் ஒரு சிறு விவரக் குறிப்பு காணப்படும். இது நாலேஜ் கிராப்(Knowledge Graph) என அழைக்கப்படுகிறது.

பயனர் ஒருவர், கூகுளில் தேடும் ஒரு விஷயத்தின் முக்கியக்குறிப்பு மற்றும் பொருத்தமான தகவல்களை தனியாகப் பிரித்து நாலேஜ் கிராஃபில் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. கணினி, மடிக்கணினி மற்றும் செல்போன் திரைகளில் சிறியதாக நாலேஜ் பேனல் காணப்படுகிறது.

இந்நிலையில், பயனரின் வசதிக்காக நாலேஜ் பேனலை குறிப்பிட்ட அளவை விட பெரியதாக மாற்றி கூகுள் நிறுவனம் மறுவடிவமைப்பு செய்துள்ளது. இதன்மூலம் தேடும் தகவல்களைத் தெளிவாகவும், குறிப்பிடப்பட்ட தலைப்பை விரைந்து ஆராயவும் வசதியாக இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பயனரிடம் இருந்தும் கிடைக்கப்பெறும் தலைப்புகளுக்கு, கூகுளின் இணையப் புரிதலுக்கு ஏற்ப தேவையான தகவல்களை விரைவாக ஷ்னாப்சாட் முறையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிட் லேஅவுட் தொழில்நுட்ப முறைப்படி தலைப்புகளின் தரவுகளுக்கு ஏற்ப புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெளிவாக வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுக்கு என தனித்தனியாக லேஅவுட் கிரிட்கள் தயாரிக்கப்பட்டு அவர்களது வருமானம், சொத்துமதிப்பு உள்ளிட்ட தகவல்களை நாலேஜ் பேனலில் காட்டும் வசதியை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்திய ராணுவம் - சீனா இடையே மோதல்; எந்த வீரரின் உயிருக்கும் பாதிப்பில்லை - ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details