தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புவியியலாளர் மேரி தார்ப்பின் சாதனைகளுக்காக டூடுல் வெளியிட்ட கூகுள் - புவியியலாளர் புரூஸ் ஹீசன்

கடலின் புவியியல் வரைபடத்தை வரைந்த புவியியலாளர் மேரி தார்ப்பின் வாழ்வியல் சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று (நவ-21) மேரி தார்ப்பிற்கு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

Etv Bharatபுவியியலாளர் மேரி தார்ப்பின் சாதனைக்களுக்காக டூடுல் வெளியிட்ட கூகுள்
Etv Bharatபுவியியலாளர் மேரி தார்ப்பின் சாதனைக்களுக்காக டூடுல் வெளியிட்ட கூகுள்

By

Published : Nov 21, 2022, 3:00 PM IST

Updated : Nov 21, 2022, 3:16 PM IST

அமெரிக்க புவியியலாளரும், கடல்சார் வரைபடவியலாளருமான மேரி தார்ப்பின் வாழ்க்கையை கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு நவம்பர் 21அன்று அமெரிக்க நாடாளுமன்ற லைப்ரரியால் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வரைப்படக் கலைஞர்களில் ஒருவராக இணைத்து பெருமைப்படுத்தியது. இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்கி அதன் கோட்பாடுகளை நிரூபித்த பெருமை உடையவர், மேரி தார்ப். இவரது பெருமையை உலகமெங்கும் அறியும் அளவிற்கு இந்த Interactive டூடுல் வெளியாகியுள்ளது.

இந்த டூடுலில் கெய்ட்லின் லார்சன், ரெபேக்கா நெசெல் மற்றும் டாக்டர் டியாரா மூர் ஆகியோரின் குரல்களால் மேரியின் வாழ்க்கை விவரிக்கப்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் உபயோகிப்பவர்கள் ஊடாடும் டூடுலைக் கிளிக் செய்ததும் மேரி தார்ப்பின் வாழ்க்கையை விவரிக்கும் பல விளக்கப்படங்களை பின்புறம் ஒலிக்கும் குரலோடு இணைந்து கேட்கலாம்.

கூகுள் டூடுல் பக்கத்தில் மேரி தார்ப் ஜூலை 30, 1920 அன்று, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள யப்சிலாண்டியில் பிறந்ததாக காட்டுகிறது. தார்ப்பின் தந்தை அமெரிக்க வேளாண்மைத் துறையில் பணிபுரிந்ததால் மேரி தார்ப்புக்கு வரைபடத் தயாரிப்பு குறித்த அறிமுகம் எளிதில் கிடைத்தது.

இதனையடுத்து மேரி மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் புவியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். 1948ஆம் ஆண்டில், அவர் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார் மற்றும் லாமண்ட் புவியியல் ஆய்வகத்தில் பணிபுரிந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

பின்னர் அந்த ஆய்வகத்தில் மேரி புவியியலாளர் புரூஸ் ஹீசனை சந்தித்தார். ஹீசனுடன் இணைந்து அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் ஆழம் குறித்த தரவுகளை சேகரித்தார். இது அவர்களுக்கு அப்போது வரை கண்டுபிடிக்கப்படாத கடல் ஆழம் தொடர்பான வரைபடங்களை உருவாக்க மேரி தார்ப்பிற்கு பயன்பட்டது. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் மேரி மற்றும் ஹீசனின் கண்டுபிடிப்புகளையும், தரவுகளையும் ஒப்புக்கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளினர்.

பின்னர் 1957ஆம் ஆண்டில் தார்ப் மற்றும் ஹீசன் இணைந்து வடக்கு அட்லாண்டிக்கில் கடல் தளத்தின் முதல் வரைபடத்தை வெளியிட்டனர். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, நேஷனல் ஜியோகிராஃபிக் இரண்டு புவியியலாளர்களால் எழுதப்பட்ட முழு கடல் தளத்தின் முதல் உலக வரைபடத்தை "உலகப் பெருங்கடல் தளம்" என்ற தலைப்பில் வெளியிட்டது.

1995ஆம் ஆண்டில், தார்ப் அவரது முழு வரைபடத் தொகுப்பையும் அமெரிக்காவின் நாடாளுமன்ற நூலகத்திற்கு வழங்கினார். அதன் புவியியல் மற்றும் வரைபடப் பிரிவின் 100ஆவது ஆண்டு விழாவில், அமெரிக்க நாடாளுமன்ற நூலகம் அவரை 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான வரைபடக் கலைஞர்களில் ஒருவராகக் குறிப்பிட்டது.

இதையும் படிங்க:Atom Expo : சர்வதேச அணுசக்தி கண்காட்சி... இந்தியர்கள் பங்கேற்பு

Last Updated : Nov 21, 2022, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details