தானியங்கி ஃகாபி இயந்திரமான எஸ்பிரஸ்ஸோ ஃகாபி எந்திரத்தை உருவாக்கிய ஏஞ்சலோ மோரியோண்டோவின் பிறந்த நாளுக்கு கூகுள் நிறுவனம், டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏஞ்சலோ 1851 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள், இத்தாலியில் உள்ள ஒரு தொழில்துறை சார்ந்த குடும்பத்தில் பிறந்தார்.
இவரின் தாத்தா ஒரு உருவாக்கும் தொழிற்சாலை நடத்திவந்தார். இவரைத் தொடர்ந்து ஏஞ்சலோவின் தந்தை இதனை நடத்தினார். பின்னாளில் ஏஞ்சலோவின் தந்தை சாக்லேட் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். இயல்பாகவே கண்டுபிடிப்புகளுடன் வளர்ந்த ஏஞ்சலோ 1884 ஆம் ஆண்டு புது விதமாக நீரை தானாகவே சூடு படுத்தி, பின் காப்பி கொட்டைகளை பொடியாக்கும் இயந்திரமான எஸ்பிரஸ்ஸோ ஃகாபி இயந்திரத்தை வடிவமைத்தார்.
இந்த இயந்திரத்தை டுரின் நகரத்தில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதன் தயாரிப்பு உரிமம் ஆறு ஆண்டுகளுக்கு ஏஞ்சலோவின் மேற்பார்வையில் செயல்பட ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.