உலக அளவில் 3 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா
ஹைதராபாத்: உலகெங்கிலும் தற்போது வரை 3 கோடியே 27 லட்சத்து 58 ஆயிரத்து 988க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகப் பெரும் தொற்று நோயான கரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுபாட்டை அமல்படுத்தியுள்ளது.
தற்போதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு 3 கோடியே 27 லட்சத்து 58 ஆயிரத்து 988க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த்தொற்று மூலம் இதுவரை 9 லட்சத்து 93 ஆயிரத்து 435க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 59 லட்சத்து ஆயிரத்து 571 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 93 ஆயிரத்து 410 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 25 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் தினமும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பல இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.