நியூயார்க்:அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார். பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 104.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 115.5 பில்லியன் டாலராகும். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 90 பில்லியன் டாலர்களுடன் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொழிலதிபர் கவுதம் அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்துவருகிறார். இதனிடையே இந்தியாவின் 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. அந்த வகையில், டெலிகாம் துறையில் அதானி நுழைந்தால் அவரது சொத்துமதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.