அங்காரா: கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தெற்கு துருக்கியில் 7.8 ஆக ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கியின் 10 நகரங்கள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான லெபானன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படை வீரர்கள் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று (பிப்.23) மாலை 6.53 மணிக்கு தெற்கு துருக்கி மாகாணத்தின் சிரியா எல்லையான ஹத்தாயில் நகரில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 என்ற அளவில் நில நடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது 9.67 கிலோ மீட்டர் ஆழத்தில் டெப்னே மாகாணத்தில் உணரப்பட்டதாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 21ஆம் தேதி டெப்னே மாகாணத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு கூறுகையில், “துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 43,556 பேர் உயிரிழந்து உள்ளனர்.