லாஹூர்:கடும் நிதி நெருக்கடியால் அண்மைக் காலமாக பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது. நிதி நெருக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தியாவிடம் காஷ்மீர் பிரச்சினை குறித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட தூது விட்டது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து மானிய விலையில் எரிபொருள் உள்ளிட்ட பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு பல்வேறு முயற்சிகள் வீணாகின.
மேலும் அண்டை நாடுகளிடம் இருந்தும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் நிதி கேட்டு பாகிஸ்தான் முறையிட்டு வருகிறது. அடுத்த நாள் உணவு தேவையை தீர்க்க முடியாமல் மக்கள் பலர் கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வானுயர்ந்த விலை காரணமாக அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே நிலவும் மின்சார தட்டுபாடு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை அந்நாட்டு மக்களை மேலும் துயரில் ஆழ்த்தி வருகிறது. பல்வேறு இடங்களில் வழங்கப்படும் இலவச கோதுமை மாவு மற்றும் தானியங்களை கொண்டு அன்றாட நாட்களை மக்கள் கழித்து வருவதாக சொல்லப்படுகிறது.