தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரேசில் கால்பந்து கேப்டன் கஃபு கொல்கத்தா வருகை - Cafu to visit Kolkata

பிரேசில் முன்னாள் கால்பந்து கேப்டன் கஃபு கொல்கத்தா வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரேசில் கால்பந்து கேப்டன் கஃபு கல்கத்தா வருகை
பிரேசில் கால்பந்து கேப்டன் கஃபு கல்கத்தா வருகை

By

Published : Nov 3, 2022, 7:02 AM IST

உலகக்கோப்பை வெல்ல காரணமான பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து கேப்டன் கஃபு, நாளை (நவ 4) கொல்கத்தாவுக்கு வர உள்ளார். இந்த பயணத்தின்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை கஃபு சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஜெர்சியையும், கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு ஒரு பந்தையும் கஃபு வழங்க உள்ளார். மேலும் போலீஸ் பிரண்ட்ஷிப் கோப்பையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கஃபு கூறுகையில், “இந்த பயணம் எனக்கு ஒரு மரியாதை. கொல்கத்தா சிறப்பான இடம். இந்த நகரத்தில் உள்ள மக்கள் பிரேசிலின் தீவிர ரசிகர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உள்ளது. புதிய இளம் தலைமுறையினர் கால்பந்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்க விரும்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:உலகக்கோப்பை டி20: இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details