அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது மனைவி இவானா ட்ரம்ப் (73) காலமானதாக, தான் சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் நேற்று (ஜூலை 14) பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இவானா ட்ரம்ப் நியூயார்க் நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். மிக அழகான அற்புதமான பெண்ணான இவர், ஒரு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தவர். தனது மூன்று குழந்தைகள் மீதும் அதீத பாசமும், மதிப்பும் வைத்திருந்தவர். இவானாவின் ஆன்மா சந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து இவானா ட்ரம்ப் மகளான இவாங்கா ட்ரம்ப், தனது தாயின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “எனது அம்மாவின் மறைவால் மனமுடைந்துள்ளேன். அவர் பல சிறந்த குணங்கள் கொண்டவர். எந்த ஒரு சூழலிலும் சிரிப்பை அவர் இழந்ததில்லை. அவரை இழந்து நான் வாடுகிறேன். அவரது நினைவுகள் என் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.