தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரேசில் நாட்டில் முதல் குரங்கம்மை உயிரிழப்பு! - Brazil monkeypox ratio

பிரேசில் நாட்டில் குரங்கம்மை பாதிப்பால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

பிரேசில் நாட்டில் முதல் குரங்கம்மை உயிரிழப்பு பதிவானது!
பிரேசில் நாட்டில் முதல் குரங்கம்மை உயிரிழப்பு பதிவானது!

By

Published : Jul 30, 2022, 8:43 AM IST

சர்வதேச அளவில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கட்டிப்பிடித்தல், முத்தங்கள், மசாஜ்கள் அல்லது உடலுறவு மூலம் குரங்கம்மை பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் பிற பொருட்களான ஆடை மற்றும் துண்டுகள் மூலமும் பரவுகிறது.

இதனால், குரங்கம்மையை உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டின் தென்கிழக்கு மினாஸ் ஜெராசிஸ் மாநிலத்தின் தலைநகரான பெலோ ஹாரிஜோண்டியில் உள்ள பொது மருத்துவமனையில் 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவர் புற்றுநோய் உள்ளிட்ட பிற தீவிர நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுவரை மினாஸ் ஜெராஸில் 44 பேருக்கு குரங்கம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 130 பேர் பரிசோதனையில் உள்ளனர். பிரேசிலில், புதன்கிழமை (ஜூலை 27) நிலவரப்படி 978 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சர்வதேச அவசர நிலையாக குரங்கம்மை நோய் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details