ஹெல்சின்கி: ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் அண்மையில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்த பார்ட்டியில் சன்னா மரின் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பார்ட்டியில் போதைப்பொருள் விருந்து நடத்தப்பட்டதாகவும், சன்னா மரினும் போதைப்பொருள் எடுத்துக்கொண்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
பார்ட்டியில் ஃபின்லாந்து பிரதமர் போட்ட குத்தாட்டம் - பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
![பார்ட்டியில் ஃபின்லாந்து பிரதமர் போட்ட குத்தாட்டம் பார்ட்டியில் ஃபின்லாந்து பிரதமர் போட்ட குத்தாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16144115-thumbnail-3x2-l.jpg)
பார்ட்டியில் ஃபின்லாந்து பிரதமர் போட்ட குத்தாட்டம்
இதற்கு பதிலளித்த சன்னா மரின், "பார்ட்டியில் மது மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வேறு போதைப்பொருட்களை பயன்படுத்தவில்லை. நான் ஒரு பாட்டுக்கு நடனமாடியது. எனது வீட்டில் தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் பார்ட்டி செய்தது எல்லாம் சட்டப்படி அதிகாரம் பெற்ற நடவடிக்கைகள் மட்டுமே. இதில் மாபெரும் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து அணியை விலைக்கு வாங்க கோடீஸ்வரர் ராட்கிளிஃப் ஆர்வம்