பெய்ஜிங் (சீனா):கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளால் சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் சரிந்தது. அதிலும் கரோனா மூன்றாம் அலைக்கு பிறகும் ஷென்சென் உள்பட சில நகரங்களில் அதன் கட்டுப்பாடுகள் இன்னும் இருந்து வருகிறது.
அதேநேரம் வீட்டுமனை, வீடுகள், தொழிற்சாலை உற்பத்தி ஆகியவை தனது பங்கினை சீன பொருளாதாரத்திற்கு அளித்துள்ளது. இருப்பினும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் சீன பொருளாதார கணிப்பிற்கு மந்தமான நிலையையே கொடுத்துள்ளது.
ஏனென்றால் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியை 5.5% என இலக்காக கொண்டிருந்த சீனா, தற்போது 2.5% என்ற அளவில் பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு 8.1% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, அதன் பாதி அளவிற்கும் கீழாக 3% க்கு வரும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.