லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் கடந்த செப்டம்பர் 8 அன்று இயற்கை எய்திய நிலையில், அவரது மகனும் இங்கிலாந்தின் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக செப்டம்பர் 9 அன்று பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள அறையில் பல்வேறு தலைவர்கள் மத்தியில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார். அப்போது , “இங்கிலாந்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் எனது கூடுதல் கடமையை நிலைநிறுத்துவேன்.
காமன்வெல்த் நாடுகள் அனைத்தும் தங்களது இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். மதங்கள், கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் மூலம் மக்களின் நலனை பாதுகாப்பது நமது நாட்டின் பன்முகத்தன்மையை காட்டுகிறது.
இதற்கு முந்தைய மன்னர்களின் வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பேன். சர்ச் ஆப் இங்கிலாந்தில் நான் உறுப்பினராக இருந்தாலும், மற்ற மதங்களை பின்பற்றுபவர்களையும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை வாழ விரும்புபவர்களையும் மதித்து நடப்பேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பீரங்கிகள் முழங்க ராஜாவாக பதவியேற்றார் மூன்றாம் சார்லஸ்..!