தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சூடான் விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - உள்நாட்டுப் போர் 100வது நாளை எட்டிய நிலையில் விபத்து! - துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை

சூடான் நாட்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்து உள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளரின் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சூடான் விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - உள்நாட்டுப் போர் 100வது நாளை எட்டிய நிலையில் விபத்து!
சூடான் விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - உள்நாட்டுப் போர் 100வது நாளை எட்டிய நிலையில் விபத்து!

By

Published : Jul 24, 2023, 10:48 AM IST

கார்டோம்: சூடான் நாட்டின் சிவப்பு கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள போர்ட் சூடான் விமான நிலையத்தில், பயணிகள் விமானம் புறப்படத் தயாரானபோது, நிகழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளதாக, அந்நாட்டின் ராணுவம் தெரிவித்து உள்ளது.

சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையேயான போர், 100வது நாளை, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23ஆம் தேதி) எட்டி இருந்த நிலையில், இந்த விபத்து நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூடான் நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, விமானம் புறப்படத் தயாராக இருந்த போது, விமானத்தினுள் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. உயிரிழந்த 9 பேரில், 4 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். இந்த விபத்தில், சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சூடான் நாட்டில் ராணுவப் படையினருக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையிலான உள்நாட்டுப் போரில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். சூடான் தலைநகர் கார்டோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியில் இருந்து துவங்கி நடைபெற்று வரும், இந்த உள்நாட்டுப் போர், ஜூலை 23ஆம் தேதி, 100வது நாளை எட்டி உள்ளதாக, ஜின்சுவா ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

போர்ட் சூடான் விமான நிலையம், தலைநகர் கார்டோமில் இருந்து 890 கி.மீ. தொலைவில், கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக, அங்கு போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளதால், கார்டோம் சர்வதேச விமான நிலையம் பொதுமக்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ள நிலையில், போர்ட் சூடான் விமான நிலையம், நாட்டின் முக்கிய விமான நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி துவங்கிய சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே வெடித்த போர், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23ஆம் தேதி) 100வது நாளை எட்டி உள்ளது, இந்நிலையில் டார்பூர் பிராந்தியத்தில் நிகழ்ந்த ராக்கெட் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக, அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: கம்போடிய தேர்தல்: ஆசியாவிலேயே நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த பெருமையைப் பெறுகிறார் ஹுன் சென்!

ABOUT THE AUTHOR

...view details