டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8 ஆம் தேதி நரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சார்பில் ஜூலை 12 ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில் முழு அரசு மரியாதையுடன் நினைவு நிகழ்ச்சி இன்று (செப் 27) நடைபெறுகிறது. இதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜவை சந்தித்து பேசினார். இந்த இறுதி நிகழ்வில் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி நிகழ்விற்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் நீண்ட காலமாக ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். அப்போது, யூனிபிகேஷன் தேவலாயத்துடன் (Unification Church) நெருக்கமான உறவினை வைத்துக் கொண்டதுதான், இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது.
இந்த தேவாலயத்திற்கு அடித்தளமிட்டது முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே என்பதும், இதற்காக அவர் தனது குடும்பத்தாருடன் ஊழலில் ஈடுபட்டார் என்பதும் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டாம் உலகப் போருக்கு முன்பு நாட்டின் பிரதிநிதிகள் கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்டனர்.
ஆனால், போருக்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியது. மேலும், அரசு இறுதிச் சடங்குகளும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் கடந்த 1967 ஆம் ஆண்டு ஷிகெரு யோஷிடா என்ற ஜப்பான் பிரதிநிதி, ஜப்பானில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து பிரான்சிஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.