தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குருவிக்கே கூண்டா... ட்விட்டர் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் புகார்... மகிழ்ச்சியில் மஸ்க் - தனியுரிமை விசாரணைகளை

ட்விட்டரின் முன்னாள் பாதுகாப்புத்துறைத்தலைவரான பீட்டர் மட்ஜ் ஸாட்கோவின் புகார் உலகளவில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இப்போது ட்விட்டர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனியுரிமை விசாரணைகளை எதிர்கொள்கிறது.

குருவிக்கே கூண்டா...ட்விட்டர் முன்னாள் பாதுகாப்பு துறை தலைவர் புகார்...மகிழ்ச்சியில் மஸ்க்
குருவிக்கே கூண்டா...ட்விட்டர் முன்னாள் பாதுகாப்பு துறை தலைவர் புகார்...மகிழ்ச்சியில் மஸ்க்

By

Published : Aug 25, 2022, 5:40 PM IST

லண்டன்: ட்விட்டரின் போலிக் கணக்குகளின் எண்ணிக்கையை அந்நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளதாக ட்விட்டரின் முன்னாள் பாதுகாப்புத்துறைத்தலைவர் பீட்டர் முட்ஜ் ஸாட்கோ ட்விட்டர் குறித்து கூறியுள்ள புகார், உலகளவில் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, இப்போது ட்விட்டர் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தனியுரிமை விசாரணைகளை எதிர்கொள்கிறது.

ஸாட்கோவின் புகார்கள் ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன, அதில் ட்விட்டர் உள்ளூர் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியது அல்லது தவறாகப் பயன்படுத்த எண்ணியது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) மற்றும் பிரான்சின் ஆணையம் Nationale Informatique & Libertés (CNIL) ஆகியவை ஸாட்கோவின் இந்தப்புகாரை விசாரிக்கின்றன. "குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் செயல்முறைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்று பிரெஞ்சு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஸாட்கோ தனது புகாரில், ''2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அயர்லாந்தின்- DPC மற்றும் பிரான்சின் - CNIL இது போன்ற கேள்விகளைக் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்விட்டர் அந்த ஏமாற்றத்தை முயற்சிக்கப்போகிறது என்று மூத்த பாதுகாப்புத்துறை ஊழியர் ஸாட்கோவிடம் கூறியுள்ளார்.

ஜனவரியில் ஸாட்கோ நீக்கப்பட்டதில் இருந்து ட்விட்டரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பெரும்பாலும் சட்ட விரோதமானது மற்றும் தடைக்கு உட்பட்டது. இது ட்விட்டர் தளத்தின் பெரும்பாலான அல்லது அனைத்தையும் அகற்றக்கூடும்’’ என்று ஸாட்கோ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரிடம் உள்ள போலி கணக்குகள் குறித்து புகார் அளித்ததை அடுத்து, அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) ட்விட்டரை அதன் பயனர் அளவீடுகளை விளக்குமாறு கேட்டுள்ளது.

2021ஆம் நிதியாண்டில் தவறான அல்லது ஸ்பேம் கணக்குகளின் சராசரி எண்ணிக்கை mDAUஇல் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என்பதை நாங்கள் கவனிக்கிறோம் என்று ஆணையம் Twitterக்கு எழுதியது. பொருளின் அளவிற்கு, இந்த புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவதில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மற்றும் நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் அடிப்படை தீர்ப்புகள் மற்றும் அனுமானங்களை தயவுசெய்து வெளியிடவும் என்று SEC ட்விட்டருக்கு கூறியுள்ளது.

இதையும் படிங்க:உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜெர்மனியில் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details