டெல்லி: 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 2ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 8ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
National Herald case: ராகுல் காந்தி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன்
நேஷ்னல் ஹெரால்டு - ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய முறைகேடு தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தி
இதைத்தொடர்ந்து, தான் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்று இருப்பதால், ஜூன் 5ஆம் தேதிக்கு பிறகு ஆஜராக அவகாசம் அளிக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி வரும் 13ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மனை அனுப்பி உள்ளது. மேலும், சோனியா காந்திக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் ஜூன் 8ஆம் தேதி ஆஜராவதும் சந்தேகமாகி உள்ளது.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்