ஹராரே:ஜிம்பாப்வே நாட்டில், அதிபர் எமர்சன் நங்காக்வா தலைமையிலான ZANU-PF அரசு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த போதிலும், இரண்டாவது முறையாக, அதிபர் பதவிக்கு எமர்சன் நங்காக்வா, இரண்டாவது முறையாக, மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
1980ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வே நாட்டில், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) நடைபெற்ற பொதுத் தேர்தலில், நெல்சன் ஷமிசாவை தோற்கடித்து, இரண்டாவது மற்றும் இறுதி முறையாக, அதிபர் பதவிக்கு, எமர்சன் நங்காக்வா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
16 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பதவி வகித்து வந்த ராபர்ட் முகாபேயின் அரசை, 2017ஆம் ஆண்டில், ராணுவ புரட்சியின் மூலம் எமர்சன் நங்காக்வா கைப்பற்றினார். இதன்மூலம், ஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்து வந்த ஏதேச்சதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.
நாட்டின் அதிபராக எமர்சன் நங்காக்வா ஆட்சியிலும், மக்கள் சொல்லணாத் துயரங்களையே தொடர்ந்து அனுபவித்து வந்தனர். அரசின் திறன் அற்ற நிர்வாகம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதீத அளவு அதிகரிப்பு, சரியான சுகாதார கட்டமைப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.