ஐதராபாத்: துபாயில் இருந்து ஆக்லாந்து சென்ற எமிரேட்ஸ் விமானம் 13 நேரப் பயணத்திற்குப் பின் மோசமான வானிலை காரணமாக மீண்டும் துபாய் விமான நிலையத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் விரக்திக்குள்ளாகினர். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு கடந்த ஜன. 27ஆம் தேதி எமிரேட் நிறுவனத்தின் Flight EK448 என்ற விமானம் சரியாக காலை 10.30 மணிக்குப் புறப்பட்டது.
ஏறத்தாழ 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை விமானம் 13 மணி நேரத்தில் கடந்த நிலையில், ஆக்லாந்து நகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக விமானம் மீண்டும் திருப்பி விடப்பட்டது. ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்குவோம் என எதிர்பார்த்து காத்திருந்த பயணிகளுக்கு மீண்டும் துபாய் விமான நிலையம் சென்றது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.