அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்து, அதற்கானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரை வாங்கும் முடிவில் எலான் மஸ்க் திடீர் பல்டி! - எலான் மஸ்க்
ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
elon musk
இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவன பங்குகள் மதிப்பு சரிந்துள்ளன. ட்விட்டரை வாங்கும் முன் அதில் உள்ள ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளை அகற்றுவதில் முன்னுரிமை அளிப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்விட்டர் வாசிகளுக்கு குஷி நியூஸ்... ஃப்ளீட்டில் அறிமுகமான ஸ்டிக்கர் வசதி!