சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லாவின் முதன்மைச் செயல் அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 63 கோடியே 74 லட்சம் ரூபாயாகும். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், 100 விழுக்காடு பங்குகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அந்த வகையில், ட்விட்டர் நிறுவனம் பங்குசந்தையிலிருந்து தனிநபர் நிறுவனமாக மாறுகிறது. இந்த ஒப்பந்தம் நேற்று (ஏப். 25) அந்நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழு எலான் மஸ்கிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் போடப்பட்டுள்ளது. 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடைய மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லாவை தொடர்ந்து, சமூக வலைதளம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.