தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பான்-தைவான் இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே உள்ள கடல் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

earthquake-shakes-area-between-taiwan-japan-no-tsunami
earthquake-shakes-area-between-taiwan-japan-no-tsunami

By

Published : May 9, 2022, 3:32 PM IST

தைபே:இதுகுறித்து தைவான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே உள்ள கடல் பகுதியில் இன்று (மே 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, தைவானின் கிழக்கே 110 கி.மீ. தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி அபாயம் கிடையாது என்று இரு நாடுகளின் வானிலை ஆய்வு மையங்களும் உறுதி செய்துள்ளன.

இந்த நிலநடுக்கம், ஜப்பான் நேரப்பட்டி பிற்பகல் 3.23 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 12.23 மணிக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இன்று (மே 9) அதிகாலை 1.11 மணியளவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ABOUT THE AUTHOR

...view details