காத்மண்டு : நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என நேபாள அரசு தெரிவித்து உள்ளது. தாடிங் மாவட்டத்தில் காலை 7:39 மணிக்கு நில நடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் கூறி உள்ளது. பெரியளவில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டாலும், 75க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக கூறப்பட்டு உள்ளது. முழு ஆய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சேத விபரம் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. காலை 7:39 மணி அளவில் தாடிங் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலம் குலுங்கியதாகவும், அருகாமை மாவட்டங்களான பாக்மதி மற்றும் கந்தகி வரை பூமி குலுங்கியது உணரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.