நியூயார்க்:இதுகுறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ். திருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் வந்துள்ளார். ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்துத்துபேசவிருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார். இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ஏப். 11ஆம் தேதி வாஷிங்டனில் தொடங்கியது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நான்காவது 2+2 பேச்சுவார்த்தை நிகழ்வாகும்.
ஐநா பொதுச் செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு - அமெரிக்காவில் ஜெய்சங்கர்
ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்துபேசுகிறார்.
EAM S Jaishankar arrives in New York to meet UN Secy
இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைசர் ஆண்டனி பிளின்கின், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே நியூயார்க் சென்றுள்ள ஜெய்சங்கர் ஐநா பொது செயலாளரை சந்திக்கிறார்.
இதையும் படிங்க:இந்தியா-அமெரிக்கா நாடுகளின் ஒத்துழைப்பு, நோக்கத்திற்கும் அப்பாற்பட்டது: ஜெய்சங்கர்