தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நாட்டை விட்டு வெளியேறக் கூடாது - மகிந்த ராஜபக்சவுக்கு அதிரடி உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்

இலங்கையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச

By

Published : May 12, 2022, 7:03 PM IST

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பதவி விலக கோரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி அன்று தலைநகர் கொழும்புவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடம் போர்க்களமாக காட்சி அளித்தது.

இது தொடர்பாக மகிந்த ராஜபக்ச மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படட்து. அதில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பலை மகிந்த ராஜபக்ச, ஏவி விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் இலங்கையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:தப்பியோடிய ராஜபக்ச குடும்பம்... பட்டாசு வெடித்த கோயம்புத்தூர்வாசிகள்

ABOUT THE AUTHOR

...view details