தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தொற்று மனிதர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - சார்ஸ் கோவிட்

கரோனா தொற்று, மனிதர்களின் ஹோஸ்ட் செல் ஆர்என்ஏவின் செயல்பாட்டை பாதிக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Covid
Covid

By

Published : Nov 11, 2022, 5:22 PM IST

வாஷிங்டன்: பிரேசிலில் சாவ் பாலோ நகரில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனித மற்றும் விலங்கு செல் ஆர்என்ஏ பற்றிய ஆய்வுகள் தொடர்பான 13 தரவுத்தொகுப்புகளை ஆய்வுசெய்தனர். அதன்படி, கரோனா (SARS-CoV-2) தொற்று, மனிதர்களின் ஹோஸ்ட் செல் ஆர்என்ஏவின் செயல்பாட்டை மாற்றுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு செல்லில் உள்ள ஆர்என்ஏ, டிஎன்ஏவைப் போலவே மரபணு தகவல்களைச்சேமிக்கிறது. ஆர்என்ஏ, மரபணு தகவல்களை டிஎன்ஏவிலிருந்து சைட்டோபிளாஸத்திற்கு அனுப்புகிறது. இது ஒரு செல்லின் வெளிப்புறத்தின் செயல்பாட்டையும், அதன் ரசாயன செயல்முறைகளையும் கட்டுப்படுத்துகிறது. ஃபிரான்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில், வெரோ செல்கள் (Vero cells) அல்லது குரங்குகளில் இருந்து பெறப்பட்ட செல்கள் மற்றும் மனிதர்களின் Calu-3 செல்களின் எபிட்ரான்ஸ்கிரிப்டோம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எபிட்ரான்ஸ்கிரிப்டோம் என்பது செல் ஆர்என்ஏவின் அனைத்து உயிர்வேதியியல் மாற்றங்களின் கூட்டுப் பதிவாகும்.

இந்த ஆய்வில், கரோனா வைரஸால் ஏற்படும் தொற்று, பாதிக்கப்படாத செல்களின் ஆர்என்ஏவில் மெத்திலேஷனை அதிகரிக்கிறது எனத் தெரியவந்துள்ளது. மெத்திலேஷன் என்பது ஒரு உயிர்வேதியியல் மாற்றமாகும். இது ஒரு மூலக்கூறின் ஒரு பகுதியை மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றும் திறன் கொண்டது. இது புரதங்கள், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களின் செயல்பாடுகளை மாற்றுகிறது.

உயிரணுக்களில் உள்ள அனைத்து ஆர்என்ஏக்களையும் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், ஆர்என்ஏக்கள் மற்றும் டிஎன்ஏக்களின் அடிப்படை கட்டமைப்பு அலகான நியூக்ளியோடைட்களில் உள்ள மெத்திலேஷன்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதன் மூலமும், பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் ஆர்என்ஏவில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் பிரியோன்ஸ் கூறும்போது, "வைரஸ்களில் மெத்திலேஷன் இரண்டு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது புரோட்டீன் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இன்டர்ஃபெரானின் செயல்பாட்டை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது" என்று கூறினார்.

இரண்டு ஆய்வுகளிலும், ஆராய்ச்சியாளர்கள் m6aஐ பகுப்பாய்வு செய்தனர். ஏனெனில், இது ஆர்என்ஏ நியூக்ளியோடைடு மாற்றத்தின் மிகவும் பொதுவான வகையாகும். ஆர்என்ஏ நியூக்ளியோடைடுகள் நைட்ரஜன் அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றன. அவை நைட்ரஜன் கொண்ட உயிரியல் சேர்மங்களாகும். அவை இந்த நியூக்ளியோடைடுகளை உருவாக்குகின்றன. மேலும், அவை அடினைன், குவானைன், யுரேசில் அல்லது சைட்டோசின், ஒற்றை இழையுடன் இயங்கும்.

வைரஸின் ஸ்ட்ரெயின்கள் அவற்றின் நியூக்ளியோடைடுகளில் உள்ள நைட்ரஜன் தளங்களின் வரிசைகளில் மாறுபாடுகளைக்காட்டுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்தது. "சில ஸ்ட்ரெயின்கள் மற்றவற்றை விட மெத்திலேட்டாக இருக்கலாம். அப்படியானால், அவை ஹோஸ்ட் செல்களுக்குள் அதிகரிக்கும்" என்று பிரியோன்ஸ் கூறினார்.

வைரஸ் அதன் சொந்த மெத்திலேஷனுக்காக செல் என்சைம்களைப் பயன்படுத்துகிறது, வைரஸ் டிராச் (DRACH) வரிசைகளின் தழுவலுக்கான பரிணாம அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் அவை செல் வரிசைகளுக்கு மிகவும் ஒத்ததாக மாறும். டிராச்சில், D என்பது அடினைன், குவானைன் அல்லது யூராசில்லை குறிக்கிறது. R என்பது அடினைன் அல்லது குவானைன்- A என்பது மெத்திலேட்டட் எச்சம்- C என்பது சைட்டோசின்- H என்பது அடினைன், சைட்டோசின் அல்லது யுரேசிலைக் குறிக்கிறது.

செல் மெத்திலேஷன் அதிகரிப்பு, இரண்டு m6A கண்டறிதல் நிரல்களால் மேப் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று (m6anet) மல்டிபிள் இன்ஸ்டன்ஸ் லேர்னிங் எனப்படும் மெஷின் லேர்னிங் நுட்பத்தைப்பயன்படுத்தியும், மற்றொன்று (EpiNano) சப்போர்ட் வெக்டர் மெஷின் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியும் ஆய்வு முடிவுகளைச் சரிபார்த்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேன்சர் செல் அறிகுறிகளைக் கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு...!

ABOUT THE AUTHOR

...view details