தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - அமெரிக்கா

அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்
அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்

By

Published : Aug 12, 2022, 10:50 PM IST

சௌதாகுவா:1980களில் ஈரான் நாட்டில் மரண அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்தார். அப்போது மேடைக்குச்சென்று விரிவுரை செய்யவிருந்தபோது , அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மயங்கி மேடையிலேயே விழுந்தார். தாக்குதல் நடத்திய நபரை அருகில் இருந்தவர்கள் பிடித்தனர். ருஷ்டியின் உடல் நிலை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

மரண அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்த ருஷ்டி எழுதிய The Satanic Verses என்ற புத்தகம் 1988ஆம் ஆண்டு முதல் ஈரானில் தடை செய்யப்பட்டது.அப்புத்தகத்தை பல இஸ்லாமியர்கள் நிந்தனை என கருதுவதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அப்போதைய ஈரானின் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி ருஷ்டியைக் கொல்பவருக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். காலங்கள் கடந்தாலும் , ருஷ்டிக்கு எதிரான மனநிலை அந்நாட்டு மக்களிடையே நீடித்தது.

2012இல், ஒரு மத அறக்கட்டளை ருஷ்டியை கொல்வதற்கு உண்டான பரிசுத்தொகையை 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 3.3 மில்லியன் டாலர்களாக உயர்த்தியது. ஆனால், ருஷ்டி தனக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்ந்து தப்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிழக்கு சூடானில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

ABOUT THE AUTHOR

...view details