புரூசல்ஸ்: தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ( செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி) நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை, ஜனாதிபதி மாளிகை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் முர்முவின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது. .மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது, கேபினெட் அமைச்சருக்கு சமமான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெலிஜியம், பிரான்ஸ் மற்றும் நார்வே நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பெல்ஜியம் தலைநகர் புரூசல்சிஸ், பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். , ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி கூறியதாவது, "அதில் என்ன முரண்பாடு உள்ளது? எதிர்க்கட்சித் தலைவரை அழைக்க வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். அது உங்களுக்கு ஒரு விஷயத்தைத்தான் சொல்கிறது. அது சொல்வது என்னவென்றால், இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத அளவிலான மக்களின் தலைவரை அவர்கள் மதிப்பதில்லை என்று ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.