வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நேற்று (ஏப். 11) வாஷிங்டனில் நடைபெற்றது. இது நான்காவது 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நிகழ்வாகும். இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைசர் ஆண்டனி பிளின்கின், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சு வார்த்தையில், இந்தோ-பசிபிக், குவாட் கூட்டமைப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு அதன் இருதரப்பு நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது.