இந்திய-சீன நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், சீனா விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டிற்கு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. சீன நுழைவு இசைவுகள் (விசா) அல்லது குடியிருப்பு அனுமதி அட்டையை வைத்துள்ள இந்தியர்கள் சீன நாட்டிற்குச் செல்ல தற்காலிக தடைவிதிக்கப்படுவதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனா செல்ல இந்தியர்களுக்கு தடை!
டெல்லி: இந்தியர்கள் சீனாவிற்கு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
China suspends entry
அவர்களுக்கு சுகாதார நற்சான்றிதழ் வழங்கப்படாது என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், "தூதர்கள், சேவை மற்றும் சி நுழைவு இசைவு உள்ளவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நவம்பர் மூன்றாம் தேதிக்கு பிறகு நுழைவு இசைவு அளித்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Last Updated : Nov 5, 2020, 11:03 PM IST