தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா - Covid cases in China

சீன சுகாதாரத்துறை ஆணையம் தினசரி கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது.

தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா
தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா

By

Published : Dec 25, 2022, 11:30 AM IST

பெய்ஜிங்:சீனாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் தினசரி கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 25) கரோனா பாதிப்பு விவரங்களை சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணையம் நிறுத்தியதாக தி குளோபல் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அதோடு சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் குவாங்டாங் நகரங்களில் கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மற்ற மாகாணங்களுக்கும் பரவல் அதிகரித்துவருகிறது. அந்த நாட்டு சுகாதாரத்துறை வல்லூநர்களின் கூற்றுப்படி, ஜனவரி மாதம் முதல் நாளொன்றுக்கு 37 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் என்றும் இந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 42 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சீனா உள்பட 5 நாட்டு பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details