தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீன ராணுவத்தின் பயிற்சியாளர்களாக பிரிட்டிஷ் முன்னாள் விமானிகள் நியமனம் - a private test flying academy in South Africa

சீன ராணுவத்தின் முக்கிய படையான கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விடுதலை ராணுவ(People's Liberation Army) அணியின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ விமானிகளை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharatசீன ராணுவத்தின் பயிற்சியாளர்களாக   பிரிட்டிஷ் முன்னாள் ராணுவ  விமானிகள்  நியமனம்
Etv Bharatசீன ராணுவத்தின் பயிற்சியாளர்களாக பிரிட்டிஷ் முன்னாள் ராணுவ விமானிகள் நியமனம்

By

Published : Oct 18, 2022, 4:19 PM IST

லண்டன்:சீன நாட்டிற்கும், பிரிட்டனுக்கும் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ விமானிகளை பணியமர்த்தியுள்ளது.இந்த நடவடிக்கை பிரிட்டன் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இது குறித்து லண்டன் பணியகத் தலைவர் மார்க் லேண்ட்லர் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த செய்திக் குறிப்பில் கூறியதாவது, ‘பிரிட்டன் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி அந்நாட்டு அரசு முன்னாள் ராணுவ விமானிகளை சீன ராணுவத்தில் பணியமர்த்துக் கூடிய ஒப்பந்தங்களைத் தடுக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் இதுவரை சீனா 30 ஓய்வு பெற்ற பிரிட்டன் ராணுவ விமானிகளை பணியில் அமர்த்தியுள்ளது. பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் விமானபடையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் பிற கிளைகளின் கீழ் பணியாற்றிய வீரர்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, சீனா 30 ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் இராணுவ விமானிகளை நியமித்துள்ளது, இதில் சிலர் அதிநவீன போர் விமானங்களை ஓட்டியுள்ளனர். இந்த நடைமுறை பிரித்தானிய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அமைச்சு கவலை தெரிவித்துள்ளதாக லேண்டர் தெரிவித்தார்.

இவ்வாறு பணியமர்த்தப்படும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 270,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. கரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட பின்னர் வெளி நாடுகளுக்கு செல்ல தடை போன்றவைகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீரர்களுக்கு இது கவர்ச்சிகரமான வாய்ப்பு ஆகும். இருப்பினும் ஓய்வுபெற்ற விமானிகள் யாரும் உளவு, நாசவேலை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும், பிரிட்டிஷ் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படவில்லை எனவும் அவரது செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் உளவு சட்டங்களுக்கு முரணான பயிற்சி நடவடிக்கைகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற சேவை உறுப்பினர்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க பிரிட்டன் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் தென் ஆப்பிரிக்காவின் ஒரு தனியார் ஃப்ளயிங் நிறுவனத்தின் ஒப்பந்தித்தின் கீழ் இவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் எனவும் கூறினார்.

உரிய சட்டங்கள் ஏதுமில்லை: ஓய்வுபெற்ற விமானிகள் சீன இராணுவத்திடம் இருந்து பயிற்சி ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதற்கு பிரிட்டன் அரசிடம் தெளிவான சட்டங்கள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சீன ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் பிரிட்டிஷ் கடற்படையில் மேம்பட்ட விமானமான F-35 ஐ யாரும் இயக்கவில்லை. இருப்பினும் பலர் டைபூன், ஹாரியர், ஜாகுவார் மற்றும் டொர்னாடோ போன்ற விமானங்களை இயக்கிய அனுபவம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம், சீன தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei யிடமிருந்து அதன் அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க்கிற்கான உபகரணங்களை தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்குவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு - மூன்றாவது முறையாக தலைவராகிறாரா ஜி ஜின்பிங்

ABOUT THE AUTHOR

...view details