டொராண்டோ:கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரிகோயர் ட்ரூடோ ஆகிய இருவரும் தங்கள் 18 வருடத் திருமண வாழ்கையை முடித்துக்கொண்டு விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். இருவரும் விவாகரத்து பெறுவதற்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் விடுமுறை நாட்களில் ஒருவாரம் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோஃபி கிரிகோயர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவுள்ளதாகவும் அதன் பிறகு பிரிந்து செல்வார்கள் எனவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனட அரசியலில் மிகவும் பிரபலமானவர் 51 வயதான ஜஸ்டின் ட்ரூடோ. இவர், கடந்த 2005ஆம் ஆண்டு மாடல் அழகியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சோஃபி கிரிகோயரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு கனட நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்ற ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோஃபி கிரிகோயரை ட்ரூடோவுடன் பிரதமர் அலுவலகத்திற்கு வந்து பிரபல வோக் பத்திரிகையின் தலையங்கத்தில் இடம் பிடித்தார்.
இவர்களுக்கு 5 வயதான சேவியர், 14 வயதான எல்லா-கிரேஸ் மற்றும் 9 வயது ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவர்கள் பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். தங்கள் விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இருவரும், அதில், எப்போதும்போல நாங்கள் இருவரும் "அனைத்தின் மீதும் மரியாதையும், அன்பும் கொண்ட குடும்பமாக இருப்போம். அப்படிதான் இந்த குடும்பத்தை உருவாக்கியுள்ளோம்.. இனிமேலும் அதைத்தான் தொடர்வோம்" என கூறியுள்ளனர்.