கனடா (ஒட்டாவா): கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விட எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியெர்ரே பொக்லீஎவரே, வரும் தேர்தலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என 40 சதவீத கனடா குடிமக்கள் தெரிவித்துள்ளதாக குளோபல் செய்திகளுக்கான New Ipsos நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியெர்ரே பொக்லீஎவரே, லிபரல் கட்சியை விட அதிக பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குளோபல் செய்திகள் தெரிவிக்கின்றன.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியேர்ரே பொக்லீஎவரே பிரதமராக இருப்பதற்கு சிறந்த தேர்வு என 40 சதவீத கனடா மக்கள் தெரிவித்துள்ளதாகவும், இது கடந்த வருட கருத்துக்கணிப்பை விட 5 புள்ளிகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தற்போது கனடா பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த கருத்துக்கணிப்பின்படி, பிரதமராக இருப்பதற்குச் சிறந்த தேர்வு என கனடா மக்கள் 31 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும், கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ இருக்கும் லிபரல் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் தற்போது நடைபெற்ற கருத்துக்கணிப்பின்படி 4 புள்ளிகள் சரிந்து, 22 சதவீத மக்கள் பிரதமராக இருப்பதற்கு சிறந்த தேர்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கனடா நாட்டின் பொருளாதாரம் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் மக்கள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்னைகளை பியேர்ரே பொக்லீஎவரே சரி செய்ய முடியும் என மக்கள் நம்புவதாக இந்த கருத்துக்கணிப்பு உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தற்கு, ஆதாரங்களைப் பிரதமர் வெளியிட வேண்டும் என்று பியேர்ரே பொக்லீஎவரே தெரிவித்தாக கூறப்படுகின்றன.