வாஷிங்டன்:இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர், நடிகர் டாம் வில்கின்சன். கல்லூரி படிக்கும் போதே நடிப்பிலும், திரைப்படம் இயக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இவர் இருந்தார். இதையடுத்து, ஜோசப் கான்ராட் ஜோசப் கான்ராட் எழுதிய தி ஷேடோ லைன் (The Shadow line) என்ற சிறுநாவலைத் தழுவி 1976ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட த்ரில்லர் ஸ்முகா படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து தி ஃபுல் மாண்டி, ஷேக்ஸ்பியர் இன் லவ் மற்றும் சிறந்த அயல்நாட்டு மேரிகோல்ட் ஹோட்டல் போன்ற படங்களில் நடித்துப் பெயர் பெற்றார்,டாம் வில்கின்சன். மேலும் இவர், 130-க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய 50 ஆண்டுக்கால சினிமா வாழ்கையில் இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு (Oscar Award) பரிந்துரைக்கப்பட்ட இவர் அமெரிக்க அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட பல கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக, கென்னடிஸில் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் தந்தையாக அவர் நடித்தது அவருக்கு எம்மி விருதுக்கான (Emmy Award) பரிந்துரையைப் பெற்றுத் தந்தது. மேலும் பாஃப்டா, மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
75 வயதான பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின் அமெரிக்காவில் நேற்று (டிச.30) உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற நேரத்தில், இவரின் மறைவைத் தொடர்ந்து இனிமேல் தனிமையுடன் இருக்க விரும்புவதாகவும் அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், மற்றும் அவரது ரசிகர்கள் எனப் பலர் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பலவகைகளில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆர்.கே.செல்வமணியைக் காணவில்லை - ‘கேப்டன் பிரபாகரன்’ இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!