அர்லிங்டன்: முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங் விமான நிறுவனத்தில், கடந்த 1983ஆம் ஆண்டு F/A-18 என்ற போர் விமானத்தை மெக்கனல் டக்லஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த போர் விமானத்தை போயின் நிறுவனம் 1997ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டது. இதனையடுத்து இந்த போர் விமானம் சர்வதேச சந்தையில் அதிக நுகர்வோரை ஈர்த்தது.
இதன் காரணமாக அமெரிக்க ராணுவம் உள்பட கனடா, பின்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதுவரை 2,000க்கும் மேற்பட்ட F/A-18 என்ற போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு கெடுபிடி இருந்த இந்த போர் விமானத்துக்கு ‘டாப் கன் விமானம்’ (Top Gun Plane) என்ற பெயரும் கிடைத்தது.
மேலும் இந்த பெயரால் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான Top Gun: Maverick என்ற திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது. இருப்பினும், நவீன ரக போர் விமானங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் டாப் கன் ரக போர் விமானங்களுக்கான மவுசு கணிசமாக குறையத் தொடங்கியது.