ஜெனீவா(சுவிட்சர்லாந்து):இந்தோனேசிய நாட்டில் மேற்கு ஜாவா மாகாண ஆளுநராக இருப்பவர், ரித்வான் கமில். இவரின் மூத்த மகன் எம்மரில் எரில் கான் மும்தாஜ் (22) கடந்த சில நாட்களுக்கு முன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஆரே ஆற்றில் நண்பர்களுடன் கடந்த மே 26ஆம் தேதி குளிக்கச்சென்றுள்ளார்.
இதில் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிய எம்மரில், நீரில் மூழ்கியுள்ளார். உள்ளூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. பெர்ன் காவல் துறையினர் ட்ரோன்கள், மோப்ப நாய்கள், படகுகள் கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.