தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவின் கரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் இணை இயக்குநர் பில்கேட்ஸ் பாராட்டு! - கோவிஷீல்டு

கரோனா வைரஸ் தடுப்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் , தடுப்பூசி இயக்கத்தையும் மைக்ரோசாப்ட் இணை இயக்குநர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

By

Published : May 29, 2022, 10:54 PM IST

கடந்த மே 25ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது அமைச்சரும் மைக்ரோசாப்ட் இணை இயக்குநர் பில்கேட்சும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த நிலையில் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நோய் கட்டுப்பாடு மேலாண்மை, மலிவு விலையிலேயே மருத்துவ சாதனங்களின் வளர்ச்சியை வலுப்படுத்துவது தொடர்பாக பில் கேட்ஸுடன் விவாதித்ததாக தெரிவித்திருந்தார்.

அந்த பதிவின் கீழ் மைக்ரோசாப்ட் இணை இயக்குநர் பில்கேட்ஸ் , மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து உலகளாவிய ஆரோக்கியம் பற்றி கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும்; கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தடுப்பூசி இயக்கத்தினை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியது உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் குறைவு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details